வழுத்தூர் ஆன்லைன் தமிழ் இணையதளம்

.

மறைவு அறிவிப்பு 11-08-2009 காலை 11.30 மணிக்கு மேல வழுத்தூர் தானாவதி அப்துல் ரசூல் காலமானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்பார்ந்த வழுத்தூர் வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த வழுத்தூர் ஆன்லைன் இணைய தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.
திருமணம், மறைவு மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும் வரவேற்கப்படுகின்றன. வாழ்த்துக்கள், அனுதாபங்கள், சமூக கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
வழுத்தூர் மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளை தெரிந்து கொள்ள உதவுங்கள்.
நம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி


கல்வியைத் தேடி
மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன.உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான வழியைக் காட்டுகிறது.

படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விலங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. நல்லவர்களைப் பற்றித் திருக்குர் ஆன் பேசும் போது.....


 

Copyright All Rights Reserved வழுத்தூர் ஆன்லைன் by Mohamed Brother`s