வழுத்தூர் ஆன்லைன் தமிழ் இணையதளம்

.

மறைவு அறிவிப்பு 11-08-2009 காலை 11.30 மணிக்கு மேல வழுத்தூர் தானாவதி அப்துல் ரசூல் காலமானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்பார்ந்த வழுத்தூர் வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த வழுத்தூர் ஆன்லைன் இணைய தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.
திருமணம், மறைவு மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும் வரவேற்கப்படுகின்றன. வாழ்த்துக்கள், அனுதாபங்கள், சமூக கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
வழுத்தூர் மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளை தெரிந்து கொள்ள உதவுங்கள்.
நம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி




துபையில் விற்பனையாகும் ஹிஜாப்களில்(புர்ஹா) புற்று நோய் இரசாயனங்கள்!
துபையில் விற்பனையாகும் ஹிஜாப்கள் (கேன்ஸர்) புற்று நோயை ஏற்படுத்தக் கூடியவை என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இது UAE யின் GULF NEWS செய்தியில் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய உடையான ஹிஜாப் (Abayas and Shailahs) முஸ்லிம் பெண்கள் பரவலாக அணியக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் துபையின் மத்திய ஆய்வுக்கூடமான (DCL) ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இதில் ஹிஜாப் தயாரிக்கப் பயன்படுத்தப் படும் துணியில் நிறத்தினைத் தருவதற்காக பயன்படுத்தப் படும் இரசாயனப் பொருட்களில் கார்ஸினோஜென்ஸ் (carcinogens) என்ற நச்சுத் தன்மை வாய்ந்த இரசாயனம் கலக்கப் பட்டிருப்பதும் அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக உலோகக் கலவைகள் இவ்வகை நெசவில் பயன்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

DCL இல் பணிபுரியும் ஸோஃபியா காஸிம் என்ற பெண் ஆய்வாளர் கல்ஃப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள செய்தியில் இந்த திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வினைத் தொடர்ந்து துபையில் உள்ள பெரும்பாலான ஹிஜாப் நிறுவனங்கள் தயாரிக்கும் உடைகள் கார்ஸினோஜென்ஸ் தனிமங்கள் உள்ளனவா என்ற ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றன. இத்தகைய ஹிஜாபை அணிவதால் உடலில் ஏற்படும் இராசயப் மாற்றங்கள் மற்றும் பக்க விளைவுகளை ஆய்வு செய்தபின் இந்த அறிக்கை.....




 

Copyright All Rights Reserved வழுத்தூர் ஆன்லைன் by Mohamed Brother`s