நமது சமூக நலனுக்காகவும் நமது ஊரின் முன்னேற்றத்திற்காகவும் இந்த அமைப்பின் வாயிலே இதோ நாங்களும் வீரநடை போட்டு வருகிறோம் சுழற்றிவிடப்பட்ட பம்பரமாய் சுற்றும் பணிகளுக்கிடையில் சுயநலமில்லாமல் பொதுச்சேவையை கொள்கையாக ஏற்றுக்கொண்டு உதவ தயாராக இருக்கின்றோம்
நமதூரில் இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஹஜ்ரத் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்களின் நினைவாக 19.07.2009 அன்று வழுத்தூர் மதராஷா பள்ளிவாசலில் கீழ்வரும் முக்கியமான குறிக்கோள்களை மையமாக கொண்டு உருவாககப்பட்டுள்ளது.
இயன்ற வரை உதவிடுவோம் இயலாதவற்கே என்பதற்கேற்ப நம்மில் நலிந்தவரை தேர்ந்தெடுத்து நம்மால் முடிந்த வரையில் நலிந்தவரின் நலனுக்காக உதவி வருவது.பொது சேவைத்திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகளை செய்து வருவது
இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:-
1.படிப்பை தொடர இயலாத ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு படிப்பை தொடர கல்வி மேம்பாட்டு திட்டம்
2.ஏழைகளுக்கு உதவும் திட்டம்
3.ஏழைபெண்கள் திருமண உதவி திட்டம்
கல்வி மேம்பாட்டு திட்டம்:--
இந்தியா வல்லரசாக பறைசாற்றிக்கொள்ள,அனைவருக்கும் தரமான உயர்கல்வி இன்றியமையாததாகும். நம் சமுதாய மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி பெறுவதற்காக கல்வி மேம்பாட்டு திட்டம் ஒன்றை வகுத்து அதற்கென்று தனிப்பிரிவை உருவாக்கி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கியும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக தகுதி இருந்தும் படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவி வருவது
மேற்கொண்டு எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் என்று தவிக்கும் மாணவர்களுக்காக கல்வியில் சிறந்த ஆசிரியர்களின் மூலமாக ஆலோசனை வழங்குவது.
ஏழைகளுக்கு உதவும் திட்டம்:--
சமுதாயத்தில் ஏழைகளின் வேதனையை போக்கவும், கண்ணீரைத் துடைக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக வறுமைக்கோட்டிற்க்கு கீழ் உள்ள ஏழைகளை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை மேன்மையடைய உதவுவது,இதற்காக சந்தா ஜக்காத் வசூல் செய்து ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம்.
திருமண உதவி திட்டம்:--
நம் சமுதாயத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைப்பெண்களின் திருமணத்திற்காக திருமண உதவித்தொகை வழங்குவது, அதாவது மணமகளின் தேவைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களை வழங்குகின்றோம். பணமக தருவதில்லை, இதற்க்காக தனிப்பிரிவை உண்டாக்கி செயயல்படுத்தப்பட உள்ளோம்
இத்திட்டதால் பயன் தேவையெனில் முறையாக எங்களை நாடினால் தகுதி இருப்பின் உதவப்படும்.
மேலும் இந்த அமைப்பு வளர சகோதரர்களே தங்களின் ஆதரவை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம் நன்றி
Contacts:
A. Yusuf Ansari (DACCU)
Mobile: +91-90952-47143
B. YASIR B.E.,
MObile: +91-98944-40956
M. Abdul Kadar B.Com.,
Mobile:+91-98947-37487
M. Sameer B.C.A.,
Mobile: +91-97897-29717

